1 YR B.A.,TAMIL, I SEM தற்காலத்தமிழகத்தமிழும் அயலகத்தமிழும்



தற்காலத்தமிழகத்தமிழும் அயலகத்தமிழும் தாளுக்குரிய பாடங்கள் இளங்கலை-முதற்பருவம்-அலகு-1.கவிதைகள்

அ.ஆசியஜோதி,கவிமணி
ஆ.மலேசியக்கவிதைகள்

1.சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மலேசிய மரபுக்கவிதைகள்

ரெ.சண்முகம் அவர்களின் பாடல்.பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.இவருடையசெந்தாழம் பூவாய்பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார்.



**********************



சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே

இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே




புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே



கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே

ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே
        
2.மலேசிய  மரபுக்கவிதை
இவனா தமிழன்? இருக்காது! யானைக்குப் பூனை பிறக்காது!

மலேசியாவில் தமிழ் தமிழாக நிலவுவதற்கும் நிலைபெறுவதற்கும் அரும் பாடாற்றி வரும் விரல்விட்டுச் சொல்லத் தகுந்தவர்களில் குரல்விட்டுச் சொல்லத்தக்கவர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள். தமிழே தம் மூச்சாக வாழ்ந்து வருபவர் இவர். இதழியல் துறையில் மிக ஆழ்ந்த ஈடுபாடும் நீண்ட பட்டறிவும் கொண்டவர். தமிழ் இலக்கணத்தின் மரபியலையும் மரபுக் கவிதையின் மாண்பியலையும் தனியராகவே முயன்று காப்பதோடு, இவ்விரண்டையும் இளையோருக்குப் பயிற்றுவிக்கும் அரிய பணியையும் அயராது மேற்கொண்டு வருபவர்.  கடந்த 2008இல் தனியொருவராக இருந்து உலக அளவில் முதன்முதலாக தமிழ்ச் செம்மொழி சிறப்புமலரைவெளியிட்டு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்; மலேசியத் தமிழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்.
***************

 இவனா தமிழன்? இருக்காது! யானைக்குப் பூனை பிறக்காது!

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!

0 comments:

Post a Comment