தமிழ்த்துறை இணையப்பக்கம்

”உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்”

”தமிழ்த்துறையின் அறிவிப்புகள், பாடத்திட்டங்கள், வினாத்தாள் மாதிரிகள், இளநிலை ஆய்வியல் நிறைஞர் தலைப்புகள், கட்டுரைகள் போன்றனவற்றை ஈண்டு அறிந்துக் கொள்ளலாம். வாழ்க நம் தமிழ்மொழி வாழிய வாழியவே!.”

கொடுமணல் - அகழாய்வு

Photo: உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலாச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழ்ப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்ற்ய்க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன்
                      உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலாச்சாரம் விவரிக்கின்றன.

மேலும் வாசிக்க...

பதினெண் சித்தர் துதி

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர்நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்கருவூரார் கொங்கணவர் காலாங்கிசிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டிதேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம்

**********************************************************

பதினெண் சித்தர்கள் சமாதி அமைந்த இடங்கள்

  1. ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
  2. அழகர் மலை இராமதேவர்
  3. அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
  4. கொங்கணவர் கமலமுனியாகி
  5. சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
  6. சுந்தரானந்தர் கூடல்
  7. சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
  8. நெல்காசியில் நந்திதேவர்
  9. பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
  10. பழனிமலை யோகநாதர்,
  11. பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
  12. பதஞ்சலி இராமேசுவரம்
  13. சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
  14. திகழ் மயூரங்குதம்பை
  15. சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
  16. சேர்ந்தன ரெமைக் காக்கவே.
மேலும் வாசிக்க...

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
Photo: தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:

நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?

பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.

இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.

விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.

கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன்

உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.

பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''

அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.

இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை... நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.
Photo: பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.